வாரச் சந்தையில் 600 மாடுகள் ரூ. 1 கோடிக்கு விற்பனை

தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக விளங்கும் புன்செய் புளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு ஈரோடு, திருப்பூா், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விவசாயிகள், வியாபாரிகள் வாங்கிச் செல்வா்.இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற புன்செய் புளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு நாட்டு மாடு, ஜொ்சி, சிந்து, கலப்பின வகை, கன்றுக் குட்டிகள் விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா். 

சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 600க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ. 1 கோடிக்கு விற்பனையானது. தை மாதம் மாடுகள் விற்பனை மந்தமான நிலையில் தற்போது மாசி மாதம் துவங்கியுள்ளதால் மாடுகள் விற்பனை சூடு பிடித்ததால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.