சிக்கன் கடையில் தீ; 100 கோழிகள் பலி

ஈரோடு: ஈரோடு, சூளை பஸ் நிறுத்தம் அருகில், கோகுலகண்ணன், 50, என்பவர், சிக்கன் கடை வைத்துள்ளார். ஓலையால் வேயப்பட்ட கடையாகும். நேற்று நள்ளிரவு, 2:15 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வந்தது. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி, தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர். 

இதில் கடை முழுவதும் எரிந்து சாம்பலானது. நாட்டுக்கோழி, பிராய்லர் கோழிகள் என, கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, 100 கோழிகள் கருகி பலியாகின. மின் தடை ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வந்தபோது, யு.பி.எஸ்.,சில் பழுது ஏற்பட்டு, தீப்பிடித்தது விசாரணையில் தெரிந்தது. சேத மதிப்பு, 30 ஆயிர்ம ரூபாய் இருக்கலாம் எனத் தெரிகிறது.