தி.மு.க., இரட்டை வேடம் ஹிந்து முன்னணி புகார்

”தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது,” என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், முஸ்லிம் பயங்கரவாதம் சமீபகாலமாக பெருகி வருகிறது. சட்டசபை தேர்தல் சமயத்தில், நக்சல்கள் மூலம், கலவரத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. 

இதை உளவுத் துறை கண்காணிக்க வேண்டும்.தி.மு.க., கூட்டணியில் உள்ளவர்கள், ஹிந்து விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே அவர்களை தோற்கடிக்க, ஹிந்து முன்னணி வேலை செய்யும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வேல் வாங்குகிறார். வேல் கொடுப்பவரை கனிமொழி தள்ளி விடுகிறார். தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது. எனவே, தி.மு.க.,வை மக்கள் நம்பக்கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.