கோரிக்கை மனுக்களுக்கு தி.மு.க., ஆட்சியில் தீர்வு

இவர்களில் பலர் இறந்துவிட்டனர். பலர் தற்கொலை செய்து கொண்டனர்.ஈரோடு பெருந்துறை அருகே, கடப்பமடை கிராமத்தில் நடந்த, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில், கோரிக்கை மனு வழங்கியவர்களிடம், ஸ்டாலின் குறை கேட்டறிந்தார். மனு குறித்து, ஏழு பேர் குறைகளை தெரிவித்து பேசிய பிறகு ஸ்டாலின் பேசியதாவது: அரசு ஊழியர், போக்குவரத்து ஊழியர் போன்றோருக்கு சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய உயர்வு வழங்கப்படாமல், சிரமத்தை சந்திக்கின்றனர். ஆட்சி மாற்றம் வந்ததும், அவர்களது கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படும். ஈஞ்சம்பள்ளி அருகே குடியிருப்பு வீடுகள் மோசமாக உள்ளதாக மனு வழங்கினீர்கள்.

இந்த தகவல் அறிந்து, அதிகாரிகள், போலீசார், அரசிடம் தெரிவித்து, ஓரிரு நாளில் அதை சீரமைப்பார்கள். அல்லது மூன்று மாதங்கள் காத்திருங்கள். நாங்கள் சீரமைத்து தருகிறோம். மக்கள் நலப்பணியாளர்களை, முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் நியமித்தார். 2001ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பணிநீக்கம் செய்தனர்.2006ல் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பணி வழங்கப்பட்டது. 2011ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.