சென்னிமலை, பெருந்துறை பகுதிகளில், 202 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்

சென்னிமலை  பெருந்துறை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், படித்த மகளிர்களுக்கு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ், தாலிக்கு தங்கம் வழங்கும் விழா, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. பெருந்துறை யூனியன் தலைவர் சாந்திஜெயராஜ் தலைமை வகித்தார். சமூகநல அலுவலர் பூங்கோதை முன்னிலை வகித்தார்.

பெருந்துறை எம்.எல்.ஏ., தோப்பு.வெங்கடாச்சலம் பங்கேற்று, 202 மகளிர்களுக்கு தலா ஒரு பவுன் வீதம், தாலிக்கு தங்கம் வழங்கினார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் கணபதி, சி.எம்.எஸ்., வங்கி துணைத் தலைவர் ஜெகதீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.