மாஸ்டர் படத்தின் ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்ட்

பொங்கலுக்கு வெளியாக நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.

மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடலான “வாத்தி கம்மிங்” பாடல் இதுவரை 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. யூடியூபில் 1.4 மில்லியன் லைக்ஸ்களையும் அள்ளி உள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் ப்ரோமோ ஒன்று வெளியாகி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் ட்விட்டரில், #MasterPromo, #100MviewsForVaathiComing, #VaathiSwag #master போன்ற ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. மாஸ்டர் படத்தின் இந்த பாடல், யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த 4ஆவது பாடல் ஆகும்.

கானா பாலச்சந்தர் எழுதியிருக்கும் இந்த பாடலை அனிருத்துடன் சேர்ந்து அவரே பாடியுள்ளார். மாஸ்டர் படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், விஜய்யின் ரசிகர்கள் பலரும் டிவிட்டரில் பல கருத்துகளையும், ஹேஷ்டேக்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இதுவரை மெர்சல் படத்தின் “ஆளப்போறான் தமிழன்” பாடல் 135.8 மில்லியன் , பிகில் படத்தின் “வெறித்தனம்” பாடல் 112 மில்லியன், தெறி படத்தின் “என் ஜீவன்” பாடல் 108 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.