கோவில் முன் வாலிபர் கொலை: சடலத்தை மீட்டு விசாரணை

சத்தியமங்கலத்தில் கோவில் முன், வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது. சத்தியமங்கலம் ஆற்றுப்பாலம் அருகே, பவானி ஆற்றங்கரையோர படித்துறையை ஒட்டி, வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது.நேற்று காலை, படித்துறைக்கு பெண்கள் துணி துவைக்க சென்றனர்.

.அப்போது, வரசித்தி விநாயகர் கோவில் நுழைவாயில் முன், தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன், 30 வயது ஆண், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். சத்தியமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அடையாளம் தெரியாதவரை, அடித்துக் கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.