பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்க திட்டம்

தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் சிந்தித்து வருகிறார்,” என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொளப்பலூரில், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், 2,500 வீடுகள் கட்டும் திட்டத்தை, நேற்று தொடங்கிவ வைத்து அவர் கூறியதாவது: தமிழகத்தின் இரு கண்களாக, விவசாயம் மற்றும் ஜவுளித்தொழில் உள்ளது. ஜவுளி தொழிலுக்கு முக்கியமாக பருத்தி உற்பத்தி நமக்கு தேவை. தமிழகத்தில், 10 சதவீதமாக இருந்த உற்பத்தி, தற்போது, 3 சதவீதமாக உள்ளது. இதனால் வேறு மாநிலம் அல்லது இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

தமிழகத்தில் மட்டுமே, அதிக நூற்பாலைகள் உள்ளன. இதற்கு தேவையான பஞ்சு கிடைக்க, முதல்வர் சிந்தித்து வருகிறார். அதனால், பருத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, சிந்தித்து வருகிறார். தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை, 15 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதே கனவு. இவ்வாறு அமைச்சர் கூறினார்.